சென்னை:நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலையில் இன்று (நவம்பர் 25) அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாகச் சென்ற காரில் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சாலையில் இலங்கைத் தூதரகம் அமைந்திருப்பதால் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த, காவலர் தேவசகாயம் காரை மடக்கி நிறுத்தியுள்ளார்.
பின்னர் காரை சோதனை செய்தபோது, காரிலிருந்த இளம்பெண் கூச்சலிட்டுக் கொண்டே தனது காலணியை எடுத்து உடனிருந்த இளைஞர்களை ஆவேசமாகத் தாக்கியுள்ளார். உடனே காவலர் தேவசகாயம் இச்சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
அப்போது காரிலிருந்த தீபக், சக்தி ஆகியோர் தப்பிக்க, கார் ஓட்டிவந்த கவுதமன் மட்டும் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், "காரிலிருந்த இளம் பெண் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே நட்சத்திர விடுதியில் பகுதி நேரமாக நடனமாடிவருகிறார்.