தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிக மின் கட்டணம் ஏன்? - மின்வாரியத் துறை

நடப்பு மாதம் மின்கட்டணம் உயர்வு தொடர்பாக மின்சாரத்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மூன்று மடங்கு மின் கட்டணம் அதிகரிப்பு
மூன்று மடங்கு மின் கட்டணம் அதிகரிப்பு

By

Published : Jul 17, 2021, 12:02 PM IST

Updated : Jul 17, 2021, 12:13 PM IST

சென்னை:இந்த மாதம் மூன்று மடங்கு மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “ பயனாளிகளின் பெயர், மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவாக குறிப்பிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறங்களில் உள்ள மின் நுகர்வோர் உரிய கட்டண தொகையை ஏற்கனவே செலுத்திவிட்டார்கள். இந்த கட்டணம் வரும் மாதங்களில் கழித்து கொள்ளப்படும் என மின்சாரத்துறை வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான செய்தி இல்லை

எனினும் இதுபற்றி தமிழ்நாடு மின்சார வாரியம் தெளிவான அறிவிப்பை கொடுக்கவில்லை என்பது கிராமப்புற, நடுத்தர ஏழை மக்களின் கவலையாக உள்ளது.

மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ரூ.1.50 லட்சம் மின்கட்டணம்: அதிர்ச்சியின் விரக்தியில் விவசாயி தற்கொலை

Last Updated : Jul 17, 2021, 12:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details