தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீஸ் எனக் கூறி 24 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மூவருக்கு போலீஸ் வலைவீச்சு..! - 24 லட்ச ரூபாயை பறித்துச் சென்ற போலி போலிஸ்

போலீஸ் எனக் கூறி ஏமாற்றி 24 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மூன்று பேரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

போலீஸ் எனக் கூறி 24 லட்ச ரூபாயைப் பறித்துச் சென்ற மூவருக்கு போலீஸ் வலைவீச்சு..!
போலீஸ் எனக் கூறி 24 லட்ச ரூபாயைப் பறித்துச் சென்ற மூவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

By

Published : Aug 11, 2022, 9:15 PM IST

சென்னை :ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் பஷீர் அகமது (55). இவர் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று (ஆக.10) பகல் வழக்கம் போல பஷீர் அகமது தனது இருசக்கர வாகனத்தில் தங்க நகைகளை பையில் எடுத்துக்கொண்டு, என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள நகை கடைக்கு விற்கச் சென்றார்.

பின்னர் நகை விற்ற பணம் 24.31 லட்சம் ரூபாயை பையில் எடுத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தாங்கள் போலீஸ் எனக்கூறி பஷீர் கையில் வைத்திருந்த பையை பறித்தனர்.

பின்னர் பஷீரிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என கேள்வி கேட்டதுடன் அவரை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஷிரின் கவனத்தை திசை திருப்பி பணத்தை எடுத்துக்கொண்டு 3 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த பஷீர், பூக்கடை காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தைப் பற்றி கூறியுள்ளார். விசாரணையில் அவர்கள் போலி போலீஸ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பஷீர் அளித்த புகாரின் பேரில் பூக்கடை காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சென்னையில் குருவியை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்துள்ள நிலையில், இதே கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடையநல்லூர் வனப்பகுதியில் கடா மான் வேட்டையாடிய ஐந்து பேர் கைது..!

ABOUT THE AUTHOR

...view details