தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகதாது அனைத்துக்கட்சி கூட்டம் - 3 தீர்மானங்கள் நிறைவேற்றம் - chennai news

மேகதாது பிரச்னை குறித்து நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனைகூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

all party meet  ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்கள்  அனைத்து கட்சி கூட்டம்  சென்னை செய்திகள்  மேகதாது பிரச்சனை குறித்து அனைத்து கட்சி கூட்டம்  மேகதாது பிரச்னை  மேகதாது அணை  three decisions taken in all party meeting  three decisions  chennai news  chennai latest news
3 தீர்மானங்கள்

By

Published : Jul 12, 2021, 2:29 PM IST

சென்னை:மேகதாது அணை கட்ட முயற்சி செய்வதை தடுப்பது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம், சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

இதில் 13 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது 3 முக்கி ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியை பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது கண்டனத்திற்குரியது .

இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும்.

எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது.

தீர்மானம் 2

மேகதாது அணை அமைப்பதற்கான முயற்சிகளை தடுப்பதில், தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

தீர்மானம் 3

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை, முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது.

அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள், தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க:மேகதாது அணை- முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details