தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்!..3.82 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணி தொடங்கப்பட்டது!

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் 3.82 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

சென்னையில் 3.82 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணி தொடங்கப்பட்டது
சென்னையில் 3.82 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணி தொடங்கப்பட்டது

By

Published : Jul 29, 2023, 7:20 PM IST

சென்னை:பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட, இராயபுரம் மண்டலம், 59வடு வார்டு, அண்ணா சாலை உள்ள சத்தியவாணி முத்து நகரில் 2022-23ஆம் ஆண்டிற்கான வெள்ள நிவாரண நிதியின் கீழ் ஒதுக்கப்பட்ட, 2.77 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று (ஜூலை 29) தொடங்கி வைத்தனர்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில், "2022-23ஆம் ஆண்டிற்கான மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், 60வது வார்டுக்கு உட்பட்ட, அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள சென்னை உருது பள்ளியில் 24.50 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டடம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணியையும், மூர் தெரு மற்றும் போஸ்ட் ஆபிஸ் தெருவில் 10.50 லட்ச ரூபாய் மதிப்பில் சாலை பணிகள் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க:250 ரூபாய் கூட அப்போ இல்லை : பெண்களுக்கு அடித்த ரூ.10 கோடி பம்பர் பரிசு.!

மேலும், 54வது வார்டுக்கு உட்பட்ட அம்மன் கோயில் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணியினையும், 6 லட்ச ரூபாய் மதிப்பில் உட்வார்ஃப் முதல் சந்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மேம்படுத்தும் பணியினையும், சரவணன் தெருவில் உள்ள சாலையோரப் பூங்காவினை 9 லட்ச ரூபாய் மதிப்பில் மேம்படுத்தல், போன்ற பணிகளை தொடங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, இராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட, யானைகவுனி பகுதியில் மூலதன நிதியின் கீழ் ஒதுக்கப்பட்ட 27.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி. மேலும், கல்யாணபுரத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் கட்டுமான பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவும், நாடளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலகர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க:‘உங்கள் மகன் பிசிசிஐ தலைவர் ஆனது எப்படி?’ - அமித்ஷாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த உதயநிதி!

ABOUT THE AUTHOR

...view details