சென்னை: தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது வள்ளுவர் குருகுலம் பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று பேருந்தின் மீது மோதியது, அப்போது பின்னால் வந்த அடுத்தடுத்த இரண்டு கார்கள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகின.
தாம்பரத்தில் அடுத்தடுத்து வந்த 3 கார்கள் மோதி விபத்து! - தாம்பரத்தில் 3 கார்கள் மோதி விபத்து
தாம்பரத்தில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததால் ஜிஎஸ்டி சாலைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்தடுத்து கார் மோதிய காரணத்தால் ஒரு காரில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைக் கண்ட காரில் இருந்த நபர்கள் பயத்தில் உடனடியாக காரில் இருந்து இறங்கியுள்ளனர். அப்போது தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகன சோதனைச் சாவடியில் இருந்த காவலர்கள் உடனடியாக சென்று ஜிஎஸ்டி சாலையில் வந்த தண்ணீர் லாரியை மடக்கி காரில் பற்றிய தீயை அனைத்தனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிட்லபாக்கம் போக்குவரத்து போலீசார் விபத்தில் சிக்கிய 3 கார்களையும் அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜிஎஸ்டி சாலையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி கார் தீப்பற்றி எரிந்ததால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.