சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் வைஷ்ணவா பெண்கள் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி அருகே ஒரு கும்பல் கஞ்சா பொட்டலங்களுடன் நிற்பதாக சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் கல்லூரி வாயில் அருகே நின்றிருந்த இரு இளைஞர்களைப் பிடித்து விசாரித்தபோது, இருவரும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்லாவரம் பம்மல் நாகல்கேணியைச் சேர்ந்த அர்சத் ஆலம் (19) பம்மலைச் சேர்ந்த சாஜித் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு கஞ்சா கொடுத்தது, நாகல்கேணியைச் சேர்ந்த முகமது உசேன் (26) என விசாரணையில் தெரியவந்தது.