சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான Frontier Business Pvt.Ltd.,என்ற நிறுவனத்தின் மண்டல மேலாளர் தினேஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அக்கவுண்ட்ஸ் மேனேஜர் பிரதாப் பசுப்புலேட்டி மற்றும் டெலிவரி பிரிவில் பணிபுரிந்து வந்த குமாரவேல் ஆகிய இருவரும் சேர்ந்து சுமார் 8 கோடியே 29,லட்சத்து 35 ஆயிரத்தி 825 ரூபாய் மதிப்பிலான 1074 I Phone மற்றும் 3 Apple Laptop-களை மோசடியாக வெளியாட்களுக்கு விற்றுள்ளதாகவும், நிறுவன பணத்தை கையாடல் செய்துள்ளது சம்மந்தமாக,அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மத்திய குற்றப்பிரிவு ஆவண தடுப்பு பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். செல்போன் சிக்னல் மூலம் தேடப்பட்டு வந்த பிரதாப் பசுப்புலேட்டி (32) என்பவரை அவரது சொந்த ஊரான நெல்லூரில் கைது செய்தனர்.
ஐ ஃபோன் மற்றும் ஆப்பிள் லாப் டாப் மோசடி கைது செய்யப்பட்ட பிரதாப் பகப்புலேட்டி அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்டட குமாரவேல்(44), ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ்வரலு (61) ஆகியோரையும் கைது செய்தனர். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பேஸ்புக்கில் பழக்கம்... ஒரு தலை காதல்... கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்