தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் அரிசியை வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 3 பேர் கைது - காவல்துறையினர் விசாரணை

சென்னை: ராயபுரம் பகுதியில் இலவச ரேஷன் அரிசியை வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற மூன்று பேரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

three-arrested-for-trying-to-smuggle-ration-rice
three-arrested-for-trying-to-smuggle-ration-rice

By

Published : May 22, 2020, 9:41 AM IST

சென்னை ராயபுரம் பிச்சாண்டி லைன் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன்(58). இவர் ராயபுரம் பகுதியில் இலவச ரேஷன் அரிசி வாங்காத பொதுமக்களிடமிருந்து ரேஷன் அட்டைகளைப் பெற்று அதற்கான அரிசியை வாங்கி, அதனை வெளிமாநிலத்திற்கு அனுப்ப முயற்சி செய்து வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கஜேந்திரன் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,650 கிலோ அளவிலான ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி

அதேபோல், வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்(39), என்பவரும் பொதுமக்களிடம் ரேஷன் அட்டைகளை வாங்கி, சுமார் 2,000 கிலோ அரிசியை வெளிமாநிலத்திற்கு விற்க முயற்சி செய்தபோது காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அரிசியை வாங்கி அதனை ரயில்கள் மூலம் ஆந்திராவிற்கு கடத்த முற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து கஜேந்திரன், மோகன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், மூன்று பேரையும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:காதலனை கரம் பிடிக்க நினைத்த மாணவி... போக்சோவில் சிக்கவைத்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details