தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தை, மகளை கொலைசெய்ய முயன்ற மூவர் கைது - குன்றத்தூர் கொலை செய்ய முயன்ற வழக்கு

குன்றத்தூர் அருகே தந்தை, மகளை கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

3 பேர் கைது
3 பேர் கைது

By

Published : Dec 17, 2021, 12:27 PM IST

சென்னை: குன்றத்தூர் அடுத்த வழுதலம்பேடு பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தினமும் டியூசன் சென்றுவருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டியூசன் முடித்து தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது வாகனத்தை மறைத்த அடையாளம் தெரியாத நபர்கள் தந்தையின் எதிரே மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இந்தச் செயலை அவர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது.

இதனையடுத்து தந்தை அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து அக்கும்பலைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வினுராஜ் (22), குன்றத்தூர் எருமையூரைச் சேர்ந்த பரத் (24), ராஜசேகரன் (30) ஆகியோரை நேற்று (டிசம்பர் 16) காவல் துறையினரிடம் பிடிப்பட்டனர்.

அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் மீதமுள்ள ஒருவர் எங்கே? எதனால் இருவரையும் கொலைசெய்ய முயற்சி செய்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details