தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபாச படங்கள் பார்ப்போரை குறிவைத்து ரூ.34 லட்சம் மோசடி

ஆபாச படங்கள் பார்த்ததற்கு கைது செய்யாமலிருக்க பணம் செலுத்துமாறு கூறி, இந்தியா முழுவதும் ரூ. 34 லட்சம் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த 3 பேர், டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபாச படங்கள்
ஆபாச படங்கள்

By

Published : Jul 24, 2021, 4:27 PM IST

சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாச படம் பார்ப்பவரை குறிவைத்து, டெல்லி காவல் துறையினர் எனக்கூறி பணம் பறிப்பதாக, டெல்லி சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார்கள் குவிந்தன. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல் துறையினர், பணம் பறிக்கும் கும்பலை தேடி வந்தனர்.

இந்தக் கும்பல் வங்கி பரிவர்த்தனை மூலமாக, பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு, சென்னையில் இருந்து செயல்படுவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை வந்த டெல்லி காவலர்கள், திருவல்லிக்கேணி காவலர்களின் உதவியுடன் கைது நடவடிக்கையில் இறங்கினர்.

சமூகவலைதளங்கள் மூலம் மிரட்டிய கும்பல்

இது தொடர்பாக சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (32), கொளத்தூரைச் சேர்ந்த கேப்ரியல் ஜோசப் (37), திருச்சியைச் சேர்ந்த தினோசந்த் (29) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகின.

முதலில் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பார்ப்பவரின் ஐடியை கண்டுபிடித்து, ஐ.பி அட்ரஸ் மூலமாக குறிப்பிட்ட நபர்களை, இந்த கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. பின்னர் டெல்லி காவல் துறையிலிருந்து பேசுவதாக கூறி, ஆபாச படம் கைது நடவடிக்கையில் ஈடுபட போவதாக மிரட்டியுள்ளனர்.

கைது நடவடிக்கையில் ஈடுபடமாலிருக்க, ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம்வரை அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். பணம் செலுத்த ஒத்துக்கொண்ட நபர்களுக்கு, வங்கி எண்ணையும் அனுப்பி வைத்துள்ளனர். அவமானத்திற்கு பயந்து, பலர் அபராதத் தொகையை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.

இந்தியா முழுவதும் ரூ.34 லட்சம் மோசடி

இந்தியா முழுவதும் ரூ. 34 லட்சம்வரை மோசடியில் ஈடுபட்டதாக, இந்த கும்பல் தெரிவித்துள்ளது. மோசடி செயலுக்காக டெல்லி காவல்துறையினரின் லோகோவையும் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் டிரான்சிட் வாரண்ட் பெற்ற டெல்லி காவல் துறையினர், மோசடி கும்பலை டெல்லி அழைத்து சென்றனர். சென்னையில் இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்தவர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் எனவும், புகாரளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோஷ்டி மோதல்: எட்டு ஆண்டுகள் குவைத்தில் தலைமறைவாக இருந்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details