தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது - 3 கிலோ கஞ்சா பறிமுதல்! - காவல்துறை விசாரணை

சென்னை: கரோனா ஊரடங்கில் வேலையில்லாததால் கஞ்சா விற்பனை செய்த மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைதுசெய்து, அவர்களிடமிருந்து மூன்று கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல்செய்தனர்.

three-arrested-for-selling-cannabis-three-kilos-of-cannabis-seized
three-arrested-for-selling-cannabis-three-kilos-of-cannabis-seized

By

Published : Sep 8, 2020, 2:26 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கத் துறை காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர். சோதனையில் அவர் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்நபர் சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண் ராம் (25) என்பதும், அவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்துவந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், வண்டலூர் பகுதியைச் சேர்ந்த ஆலன் (25), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ் (27) இவருடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களையும் கைதுசெய்த காவல் துறையினர், மூவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்பத்தில் ஃபேஸ்புக் இணையதளத்தின் மூலமாக நண்பர்களாகியுள்ளனர். தொடர்ந்து ஊரடங்கால் வேலை இல்லாததால் எப்படி பணம் சம்பாதிப்பது என யோசித்த இவர்களுக்கு, சரண் ராம் கஞ்சா விற்றால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து 3 பேரும் சேர்ந்து கஞ்சா விற்க முடிவு செய்து, ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி, அதனை சென்னையின் பல இடங்களில் விற்பனை செய்து வந்துள்ளனர். ஊரடங்கு நேரத்தில் வேலை இல்லாததால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முதல் முறையாக கஞ்சா விற்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இவர்களிடமிருந்து, சுமார் 3 கிலோ கஞ்சா, அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர் கண்களில் மிளகாய்பொடியைத் தூவி ரூ.1.45 லட்சம் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details