சென்னை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் தனியாக செல்பவர்களை குறிவைத்து வழிபறியில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் தனியாக செல்பவர்களிடம் செல்போன், நகை ஆகியவற்றை பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்தது.
மதுரவாயலும் வழிபறி சம்பவங்களும்..
மதுரவாயல் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களை மதுரவாயல் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். சம்பவங்கள் நடந்த இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அம்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் (23), யுவராஜ் (20), கார்த்திக் (20) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.