சென்னை:செம்மஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கணவரை இழந்து தனியாக இரண்டு பெண்கள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவருடைய மகள் 13 வயது சிறுமி. கடந்த 3ஆம் தேதி மூவரும் வீட்டின் தனியாக இருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்தனர்.
அங்கு, கத்தியைக் காட்டி மிரட்டி, இரண்டு பெண்கள் மற்றும் 13 வயது சிறுமி ஆகியோரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவத்தில் ஈடுபட்ட நெஸ்லி (எ) ரிஷி என்பவரை மட்டும் கைது செய்தனர். மேலும், இருவர் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய இருவரும் பாதிக்கப்பட்ட பெண்களைத் தேடிச் சென்றபோது அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களின் உறவினர்களிடம், புகார் கொடுத்ததால் அப்பெண்களைக் கொலை செய்து விடுவதாக மிரட்டு விட்டுச் சென்றனர்.