தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திபெத்திய இளைஞர்களைப் போராட தூண்டிய மூன்று திபெத்தியர்கள் கைது - The company that operates under US intelligence

சென்னை: அமெரிக்க உளவு நிறுவனத்தால் இயக்கப்பட்டுவரும் செய்தி நிறுவன ஊழியர்கள் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மூன்று திபெத்தியர்கள்

By

Published : Oct 12, 2019, 9:16 AM IST

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடப்பதால் சென்னை முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் வழியாக சென்னை வரும் திபெத்தியர்களைக் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சதாப்தி விரைவு ரயிலில் சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் வந்த மூன்று திபெத்தியர்கள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் ரயில்வே காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கைதான மூன்றுபேரும் திபெத்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அமெரிக்க உளவு நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களான ரேடியோ ஃப்ரீ ஏசியா, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற ஊடகத்தில் பணிபுரியும் பீமா நகோடப் (55), திபெத்திய மத போதகர் நவாங் ஜங்கிலி என்பதும் தெரியவந்தது.

மேலும் மூன்று பேரும் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வந்ததும் தெரியவந்தது. அவர்களது செல்ஃபோனை ஆராய்ந்தபோது நேற்று கேளம்பாக்கத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து திபெத்திய இளைஞர்களுடன் தொடர்பில் இருந்ததும் இளைஞர்களை போராட்டத்திற்கு தூண்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details