தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது - முக்கியக் குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களிடம், நூதன முறையில் வங்கி மோசடியில் ஈடுபட்ட மூன்று நபர்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

three-arrested-for-bank-fraud
three-arrested-for-bank-fraud

By

Published : Feb 25, 2020, 12:40 PM IST

தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த தொடர் வங்கி மோசடிகள் காரணமாக, தினமும் காவல் துறையில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாவது தொடர்கதையாக மாறியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு காவல் துறையினர், வங்கி மோசடிகளில் ஈடுபடும் கொள்ளையர்களைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருடன் இணைந்து தனிப்படையமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தது.

இதனைத்தொடர்ந்து கொள்ளையர்கள் டெல்லியிலிருந்து வங்கி மோசடி சம்பவங்களில் ஈடுபடுவதை கண்டறிந்த காவல் துறையினர், அவர்களின் செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

பின் குற்றவாளிகளைப் பிடிக்க டெல்லி சென்ற தமிழ்நாடு காவல் துறையினர், நான்கு நாள் தீவிரத் தேடுதலுக்குப் பின் வங்கி மோசடியில் ஈடுபட்ட தீபக் குமார், தேவகுமார், வில்சன் ஆகியோரைக் கைது செய்தனர்.

அதனையடுத்து அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் டெபிட் கார்ட் , கிரெடிட் கார்ட், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, வாடிக்கையாளர்களின் தகவல்களை வாங்கிக் கொண்டு, mobiquick போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களின் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

வங்கி மோசடியில் கைது செய்யப்பட்ட தீபக் குமார், தேவகுமார், வில்சன்

இதனையடுத்து மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரையும் சென்னை அழைத்து வந்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த மோசடிக் கும்பலின் முக்கிய தலைவன் தப்பித்து விட்டதாகவும், அவரைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கடைக்கு வந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது

ABOUT THE AUTHOR

...view details