தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக்கேட்ட ரயில்வே ஊழியருக்கு சரமாரி அடி! - Avadi News

சென்னை: ஆவடி அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக்கேட்ட ரயில்வே ஊழியரை சரமாரியாக தாக்கி மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரயில்வே ஊழியருக்கு சரமாரி அடி
ரயில்வே ஊழியருக்கு சரமாரி அடி

By

Published : Nov 7, 2020, 4:30 AM IST

அம்பத்தூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பாளராக பணியாற்றி வருபவர் லோகேஷ் மீனா (26). இவரது சொந்த ஊர் ராஜேஸ்தான் மாநிலமாகும். இவர், ஆவடி அருகே அயப்பாக்கம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று லோகேஷ் மீனா அண்ணனூர்- திருமுல்லைவாயல் ரயில் நிலையகளுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு தண்டவாளத்தில் அமர்ந்த 3 வாலிபர்கள் மது அருந்தி கொண்டு தகராறில் ஈடுப்பட்டனர்.

இதனை பார்த்த, லோகேஷ் மீனா தட்டி கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்து பாக்கெட்டில் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து ஆவடி ரயில்வே காவல்துறையிடம் லோகேஷ் மீனா புகார் அளித்தார்.

சென்னை ஆவடி

ஆய்வாளர் சுதாகர் தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், சென்னை, பெரவள்ளூர், ஜி.கே எம் காலனி சேர்ந்த பால்ராஜ்(18), அதே பகுதியை சேர்ந்த விஜி என்ற டேனியல் (24), ரெட்டிபாளையத்தை சேர்ந்த தினேஷ் (23) ஆகியோர் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், காவல்துறையினர் அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details