தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாப்பாட்டு பில் கொடுக்காமல் தகராறு - உணவகத்தை சூறையாடிய மூவர் கைது

அம்பத்தூரிலுள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தவர் உள்பட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தகராறில் ஈடுபட்டவர்கள் கைது
தகராறில் ஈடுபட்டவர்கள் கைது

By

Published : Mar 1, 2022, 4:24 PM IST

சென்னை:அம்பத்தூர் புதூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (35). இவர், அதே பகுதியில் அசைவ உணவகம் நடத்தி வருகிறார். நேற்றிரவு (பிப். 28) பிரேம்குமார் உணவகத்தில் அமர்ந்து வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவருக்கு மனைவி இந்துஜா (30) என்பவரும் உதவியாக இருந்தார்.

அப்போது புதூர், புதிய அண்ணா நகர், 1ஆவது தெருவைச்சேர்ந்த ராஜேஷ் (38) என்பவர் குடிபோதையில் உணவகத்துக்கு வந்தார்.

பின்னர், அவர் சாப்பிட்டுவிட்டு 230 ரூபாய் பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து, அவரை பிரேம்குமார் தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ராஜேஷ் வீட்டுக்குச் சென்று தனது அண்ணன் சுரேஷ் (40), நண்பரான கோகுல் (27) ஆகியோரை அழைத்து வந்துள்ளார். பின்னர், அவர்கள் மூவரும் சேர்ந்து பில்லிங் மெஷின், லேப்டாப், அழகுசாதனப்பொருட்கள் ஆகியவற்றை கத்தியால் அடித்து சேதப்படுத்தினர்.

தகராறில் ஈடுபட்டவர்கள்

மேலும், இந்துஜாவை இழிவாகப் பேசி கீழே தள்ளிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்து பிரேம்குமார் அம்பத்தூர் காவல் நிலையத்தில் இன்று (மார்ச் 1) புகார் செய்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க:கள்ளத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details