தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாட்டரிச்சீட்டு விற்பனை செய்த மூவர் கைது - மாதம் ரூ.30 லட்சம் வருவாய் ஈட்டியதாக தகவல்! - லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூவர் கைது

தாம்பரம் அருகே ஒரு நம்பர் லாட்டரிச்சீட்டு விற்பனை செய்து மாதம் 30 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டிவந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூவர் கைது
லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூவர் கைது

By

Published : Jul 1, 2022, 8:19 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த சானிடோரியம் நீதிமன்றம் அருகே உள்ள வீட்டில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு நம்பர் லாட்டரிச்சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகியது. அதனடிப்படையில் தாம்பரம் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச்சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த மூவரை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு நம்பர் லாட்டரிச்சீட்டுக்கட்டுகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மேற்கு தாம்பரம் கடப்பேரி பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் (27), மோகன்ராஜ் (36), வில்பெர்ட் (45) எனத் தெரியவந்தது.

மேலும் இவர்கள் பல மாதங்களாக அந்த வீட்டில் ஒரு நம்பர் லாட்டரிச்சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், மாதத்திற்கு சுமார் 30 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வந்ததும் தெரியவந்தது. மேலும் இதில் சானிட்டோரியம் பகுதியைச் சுற்றி உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், கூலி வேலை செய்பவர்கள் என அப்பாவி மக்கள் தொடர்ந்து பணம் கட்டி, லாட்டரிச் சீட்டு வாங்கி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய வீட்டின் உரிமையாளர் சக்கரவர்த்தி (60) என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையராக எல்லைக்குள் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:பர்மா பஜாரில் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details