தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநருக்கு சரமாரி வெட்டு: 3 பேர் கைது! - Auto driver attempt murder

சென்னை: தாம்பரம் அருகே ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக வெட்டிய மூவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Attempt murder case
Auto driver

By

Published : May 13, 2021, 8:30 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் - எம்ஜிஆர் நகர் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், ஆட்டோ ஓட்டுநர் கோபால் (34). இவர், கடந்த மே 9ஆம் தேதி இரவுப் பணியை முடித்துவிட்டு, அவரின் வீட்டு முன்பு நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கத்தியால் கோபாலின் தலை, வலது கை, இடது கை ஆகியப் பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் கோபாலின் இடது கை விரல்கள் துண்டாகி விட்டன. இதையடுத்து, அவர் தற்போது சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சேலையூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி கோபாலை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், அவர்கள் சேலையூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராஜசேகர் (27), திருவஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மார்டின் (22), மப்பேடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் சேலையூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜசேகருக்கும், பெண் ஒருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக அந்தப் பெண்ணிற்கு கோபால் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோபாலுடன் பழக்கம் ஏற்பட்ட பின் ராஜசேகருடன் பேசுவதை அந்தப் பெண் நிறுத்தியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ராஜசேகர் தன் நண்பர்களான மார்டின், ரஞ்சித் குமாருடன் இணைந்து மதுபோதையில் கோபாலின் வீட்டிற்குச் சென்று, கோபாலை சரமாரியாக வெட்டியது தெரியவந்தது.

இதையடுத்து மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details