சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (38). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார்.
இதே பகுதியைச் சேர்ந்தவர் சீனு. இவரின் வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபர் மெத்தை (Bed) ஒன்றை போட்டுச் சென்றுள்ளார். இதனால் பாலமுருகன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சீனு ஆய்வு செய்துள்ளார். அப்போது மெத்தை போட்டுவிட்டு சென்ற நபரின் சிசிடிவி காட்சிகள் பதிவாகாமல் இருந்துள்ளது. இதனால் சீனு, பாலமுருகன் மீது சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் காணொலி மேலும், மது அருந்திவிட்டு சீனு தனது நண்பர்களுடன் பாலமுருகனின் வீட்டிற்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்தும், வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை கல்லால் உடைத்தும் சேதப்படுத்தியுள்ளார்.
இதனால் சீனு மீது கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சீனுவை தேடி வருகின்றனர். விசாரணையில் சீனு மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: விஜயபுராவில் பாதசாரி மீது கார் மோதி விபத்து: சிசிடிவி கேமரா வெளியீடு