சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் இன்று( ஜூன்.5) மேலும் ஆயிரத்து 438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிகை 27 ஆயிரத்து 256 லிருந்து, 28 ஆயிரத்து 694ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஆயிரத்து 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைப் பொருத்தவரையில் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 18ஆயிரத்து, 670ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 232ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, தமிழ்நாட்டில் 15 ஆயிரத்து 762 பேர் பூரண குணமடைந்துள்ளனர். பிளாஸ்மா, தடுப்பூசி (Bcg vaccine) ஆகியவற்றை கரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. காசநோய், சர்க்கரை வியாதி, இன்ன பிற வியாதிகள் உடையவர்கள் தங்களை தகுந்தப் பாதுகாப்போடு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மூத்த குடிமக்கள் முடிந்தவரையில் வீட்டிலேயே இருக்க வலியுறுத்துகிறோம். பொது மக்கள் கட்டாயம் சமூக விதிகளை கடைப்பிடித்து முகமூடி, கையுறை அணிந்து, தங்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு உண்மையான கரோனா பாதிப்பை வெளிப்படையாக தெரிவித்து வருகிறது.
சிலர் இதைப் பற்றி குறைக்கூறுவது, கரோனா எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியில் கவலையை உண்டாக்குகிறது. சிறப்பான முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாற்றி வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க:கோவிட்-19 ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்வளித்துள்ள தெலங்கானா அரசு!