சென்னை: உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை இன்று (மே.3) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதனிடையே திமுகவின் சிறுபான்மை அணியை சேர்ந்த ஜெ.எம்.பஷீர் கூறுகையில், "வருடத்தில் 12 மாதங்களில் இந்த ரமலான் மாதம் ஆனது சிறந்ததாகும். நாம் சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். முப்பது நாட்கள் நோன்பு இருந்து இன்றைக்குச் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். காயிதே மில்லத்தின் மறு உருவமாக முதலமைச்சர் ஸ்டாலினை பார்க்கின்றோம்.
225 ஆண்டுகள் பழமையான திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் ரமலான் சிறப்பு தொழுகை முதலமைச்சர் சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்தவுடனே சட்டமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்தை நீக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார். திருவல்லிக்கேணியின் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கு வேண்டும் என வேண்டுகிறோம்" என்றார்.
மேலும், ஜபர் ரகுமானி கூறுகையில், "அல்லாவின் வழியில் நடந்து கொண்டிருக்கும் ரமலான் பண்டிகை சிறப்பாக நடைபெறுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நேரத்தில் ஒற்றுமையைக் கெடுப்பதற்காகப் பல சதித் திட்டங்களை எடுத்து இருக்கின்றனர். ஆனால் நாங்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சகோதரத்துடன் ரமலான் பண்டிகை கொண்டாடி வருகிறோம். 12 மாதங்களில் இந்த ரமலான் மாதம் ஆனது மிக முக்கியமான நாளாக கருதுகின்றோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்...