சென்னை:நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. அதன்பின் 5 ஆண்டுகளுக்கு இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - Police officials said about the arrest
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை நீக்கக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாசிச எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஆர்ப்பாட்டகாரர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், "ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்காமல் வந்ததால் கைது செய்துள்ளோம். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கோவை அருகே லஞ்சம் பெற்ற ஊராட்சி தலைவி கைது