தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரேஷனில் 2ஆவது தவணை; முதல் தவணை ரூ.2000ஐ பெறாதவர்கள் ஜுனிலும் பெறலாம்'

ரேஷனில் 2ஆவது தவணை;
ரேஷனில் 2ஆவது தவணை;

By

Published : May 31, 2021, 6:27 PM IST

Updated : May 31, 2021, 8:27 PM IST

18:23 May 31

கரோனா காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதம் வழங்கப்பட்ட முதல் தவணையான ரூ.2ஆயிரத்தைப் பெறாதவர்கள், அதனை ஜுன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றவுடன், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் எனவும், அதில் முதல் தவணையாக ரூ.2000 மே மாதத்திலேயே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மே மாதத்தில் கரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டதை 98.4%  பெற்றிருக்கும் நிலையில் மீதமுள்ளவர்கள் அதை ஜுன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்த வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளது.  

முதல் தவணையைப் பெற்ற 98.4% மக்கள் 

 இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக  அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் அரிசி குடும்ப அட்டைகள் பெறத் தகுதியுடையவை என தணிக்கை மூலம் தீர்மானிக்கப்பட்டு, குடும்ப அட்டைகள் விநியோகிக்க நடைமுறையில் இருந்த குடும்பங்களையும் சேர்த்து 2 கோடியே 9 லட்சத்து 81ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக கடந்த மே 15 முதல் வழங்கப்பட்டது. அதன்படி, குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.2000 வீதம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்றுடன் 98.4 விழுக்காடு குடும்பங்கள் நிவாரண உதவித்தொகை பெற்று சென்றுள்ளனர்.  

முதல் தவணை ரூ.2000 பெறாதவர்கள் ஜுனிலும் பெறலாம்

இதில் குடும்பங்களில் நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்குச் சென்றவர்களும், முகவரி மாற்றம் செய்து போக்குவரத்து வசதி காரணமாக நியாய விலைக்கடைக்குச் செல்ல இயலாதவர்களும் சிலர் இருப்பதாகத் தெரிகிறது.  மேற்குறிப்பிட்ட குடும்பத்தினர் அவர்களுக்கான நிவாரண உதவித் தொகை பெறும் வகையில் அத்தொகையினை ஜுன் 2021 மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.  

அட்டைதாரர்கள் உரிய கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றியும் தங்களையும் சமூகத்தையும் நோய்த்தொற்று அபாயத்திலிருந்து காத்துக்கொள்ளவும் நோய்த்தொற்று சங்கிலியினை உடைத்திடவும் உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 'தொற்று தொடர்பான அரசின் தகவலில் முரண்பாடு' - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Last Updated : May 31, 2021, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details