தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி கொலை வழக்கு: சரணடைந்த அதிமுக பிரமுகர்...! - Murder News

தூத்துக்குடி: செல்வன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.

thoothukudi-murderissue-admk-party-member-surrendered-in-court
thoothukudi-murderissue-admk-party-member-surrendered-in-court

By

Published : Sep 21, 2020, 7:37 PM IST

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன். தண்ணீர் கேன் வியாபாரியான இவர், கடந்த 17ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து திசையன்விளை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தட்டார்மடம் அருகே உசரத்து குடியிருப்பைச் சேர்ந்த அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்ததும், இதில் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பொய் புகாரில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகாரளித்து இருந்தார். இதையடுத்து தட்டார்மடம் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்த காவலர்கள், தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அதிமுக பிரமுகர் திருமணவேல், மற்றொரு முக்கிய குற்றவாளி முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் சைதாப்பேட்டை 23ஆவது நீதிமன்ற நடுவர் கவுதம் முன்பு சரணடைந்தனர். இவர்கள் இருவருக்கும் மூன்று நாள்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.

கரோனா பரிசோதனைக்கு பிறகு இருவரையும் காவல் துறையினர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்க உள்ளனர். இதன் பிறகு வழக்குப்பதிவு செய்துள்ள திசையன்விளை காவலர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சைதாப்பேட்டை 23ஆவது நீதிமன்றத்தில் சரணடைந்த அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகியோரின் வழக்கறிஞர் சிவ முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், " திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏ-2, ஏ-3 ஆகிய திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகியோர் இன்று சைதாப்பேட்டை 23ஆவது நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். 3 நாடள்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவருக்கும் கரோனா பரிசோதனைக்கு பின்னர் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட உள்ளனர்" என்றார்.

இதனிடையே செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தவறாக பரப்புரை செய்யும் எதிர்க்கட்சிகள் - தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன்

ABOUT THE AUTHOR

...view details