மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரது பிறந்தநாளுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவின் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கருணாநிதியின் செயல் திட்டங்களிலேயே மகத்தான ஒன்று சமத்துவபுரம். இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சர்களும் சிந்திக்காத புரட்சிகரமான திட்டம் பெரியார் நினைவு சமத்துவபுர திட்டமாகும். எல்லா தரப்பு மக்களும் ஒரே இடத்தில் வாழவேண்டும் என்ற ஒரு கனவு. அதை நினைவாக்கக் கூடிய திட்டம்தான் சமத்துவபுரம் என்கிற சமூகநீதித் திட்டம்.