தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன் தினம் (மே.11) வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனடிப்படையில், அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் நிதி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை, மாநிலங்களை உறுப்பினர்கள் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.