தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு பேட்டி சென்னை:தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பேட்டியில், "சனாதனம் என்பது தோற்றமும் முடிவும் இல்லாத ஒன்று எனவும், குறிப்பிட்ட அமைப்புகள் அதைப்பிடித்து கொண்டு பேசுவது முறையல்ல எனவும், உண்மையான சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து தெரியதவர்களுக்கு நாம் கற்று கொடுக்க வேண்டும் என்றார்.
தற்போது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது இவ்வளவு பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. ஆனால் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என திருமாவளவன் உட்பட பலர் பேசியுள்ளனர். அப்போதெல்லாம் இவர்கள் எங்குச் சென்றார்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், இங்குப் பிறப்பினாலும், அவரவர் செய்கின்ற தொழிலினாலும் மனிதனை வேறுபடுத்திப் பார்க்கின்றனர். எந்த ஒரு மனிதன் அவனுக்கான தொழிலை அவன் செய்யத் தயங்கக் கூடாது எனவும், பலரும் இங்குச் சனாதனம் இயற்கை தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்டது என்று கூறுகின்றனர்.
தொடர்ந்து கூறுகையில், ‘உதயநிதி பேசியது எந்த வகையிலும் தவறு இல்லை எனவும், ஒரு கருத்தைப் பதிவு செய்தால் கருத்தியல் ரீதியாகப் பேச வேண்டுமே தவிர, அதை விடுத்துவிட்டு கருத்தைத் திருத்து என பேசக்கூடாது எனவும், நாம் பேசிய கருத்தில் உறுதியாக நிற்க வேண்டும் என்றார்.
ஆதியற்ற, அந்தமற்ற, நிலையற்ற சனாதனத்தைத் தான் ஒழிக்க வேண்டும் என்று கூறினாரே தவிர இந்துக்களை அழிக்க வேண்டும் அனைவரும் வாருங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை அவர் பேசியதில் எந்த தவறுமில்லை என்றார். இது போன்ற கருத்துக்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல எல்லா நேரத்திலும் நாம் பேச வேண்டும் அதற்கான கட்டாயமும் நமக்கு உள்ளது என்றும், குறிப்பாகச் சமத்துவ சமூகத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்.சங்கம் மற்றும் பரிவார அமைப்புகள் கூறும் சனாதனத்தைக் கண்டிப்பாக அழித்தால் மட்டுமே முடியும் என்றார்.
தீண்டாமை இல்லாமல் அனைவரும் சமம் என்ற கொள்கையை நீங்கள் சொல்லும் சனாதனம் பின்பற்றுகிறதா? வேத நூல்களும் சரி, இந்துத்துவ சாஸ்திரங்களும் சரி, பிறப்பினால் அனைவரும் வேறுபட்டவர்கள் என்பதைத் தான் குறிக்கிறது. இதைத் தான் அழிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகக் கூறி வருகிறோம் எனத் தெரிவித்தார்.
நடிகை குஷ்பு போன்றவர்களெல்லாம் அரசியல் ஆதாயத்திற்காகப் பேசுகிறார்கள் எனவும், அவர்கள் எந்த கட்சியில் உள்ளார்களோ அதற்கு ஏற்றார் போலத் தான் பேசுவார்கள் எனவும், இதுவே அவர் காங்கிரஸிலிருந்தால் இப்படி ஒரு கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கமாட்டார் என்றார்.
குஷ்பு சொல்லும் சனாதனம் வேறு, நாங்கள் சொல்லும் சனாதனம் வேறு எனவும், நாங்கள் கூறுவது அனைவரிடத்தில் அன்புடனும், அரவணைப்போடும் இருக்க வேண்டும் எனவும், எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும் எனவும், இவைகளுக்கு எதிராக உள்ள நீங்கள் கூறும் சனாதனத்தைத் தான் நாங்கள் அழிக்க வேண்டும் என்கிறோம் என்றார்.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது தார்மீக அடிப்படையில் சரியல்ல... நீதிமன்றம்