தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2020, 7:31 AM IST

ETV Bharat / state

திருவேற்காட்டில் 113 வயது ஸ்ரீலஸ்ரீ அய்யப்பசுவாமிகள் இயற்கை எய்தினார்

சென்னை: 113 வயதான ஸ்ரீலஸ்ரீ அய்யப்ப சுவாமிகள் வரும் வாரம் 114ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்தார்.

thituverkadu sithar death lately
thituverkadu sithar death lately

சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீலஸ்ரீ அய்யப்ப சுவாமிகள். 113 வயதான இவர் முதுமை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று பிற்பகல் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவர் தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார். இவர் திருமடம் அறக்கட்டளையை நிறுவி அதன் சார்பில் 60 ஆண்டுகளாக அன்னதானம் செய்துவந்தார். திருவேற்காடு சிவன் கோயில் குளத்தை ரூ. 4 கோடி செலவில் அமைத்தது உள்பட பல கோடி ரூபாய் செலவில் நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளார்.

கடந்த 44 ஆண்டுகளாக தஞ்சை ராஜ ராஜ சோழனுக்கு சதய விழா நடத்தி வந்துள்ளார். இவர் ஆதி கருமாரி பட்டர், அன்னதான சிவம், கலியுக பீஷ்மர், உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்கள், அரசியல்வாதிகள், தமிழறிஞர்கள், ஆன்மிகவாதிகள், தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் இவருக்கு நெருக்கமானவர்களாக இருந்துள்ளனர்.

ஸ்ரீலஸ்ரீ அய்யப்பசுவாமிகள் இயற்கை எய்தினார்

வரும் வாரம் இவருக்கு 114ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட இருந்த நிலையில் அவர் திடீரென மறைந்தது அவரது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காட்டில் அவரது மடத்தில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. ஆதி கருமாரியம்மன் கோயில் பின்புறம் அவரது ஜீவ சமாதி அமைக்கப்பட உள்ளது. கரோனா தொற்று பரவிவரும் நிலையில் இதுபோன்ற சூழலில் சமூக விலகலை கடைபிடிக்காமல் காவல்துறை பாதுகாப்பு மேற்கொண்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க... 'போலி ஆன்மிகவாதிகளை நம்பக்கூடாது' - மதுரை ஆதீனம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details