தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்சிஜன் பற்றாக்குறை - தமிழ்நாடு அரசே விரைந்து செயல்படு- எம்பி. சு. வெங்கடேசன்

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆக்சிஜன் தேவையின் அளவு தினசரி கூடிக்கொண்டிருக்கிறது. இதனை ஈடுசெய்ய அரசிடமிருந்து கூடுதல் திட்டமிடலையும், விரைவான செயல்பாட்டையும் எதிர்பார்ப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

This is the situation so Tamil Nadu government should act quickly says mp su.venkatesan
This is the situation so Tamil Nadu government should act quickly says mp su.venkatesan

By

Published : Apr 28, 2021, 7:18 PM IST

தமிழ்நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினசரி விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் அளவு ஐந்து மெட்ரிக் டன்னாக இருக்கிறது. ஆனால் தினசரி தேவையோ ஏழு மெட்ரிக் டன். தர்மபுரி மாவட்டத்துக்கு தினசரி ஒரு மெட்ரிக் டன் விநியோகம் இருக்கிறது ஆனால் தேவையோ தினசரி மூன்று மெட்ரிக் டன்.

நாமக்கல் மாவட்டத்துக்கு நாள்தோறும் ஆறு மெட் ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் தேவையோ 10 மெட் ரிக் டன்னாக இருக்கிறது. திருச்சி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் 10 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தினசரி தேவையோ ஐந்து மெட்ரிக் டன். தேனி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள அளவு ஐந்து மெட்ரிக் டன். ஆனால் தேவையோ ஒரு வாரத்துக்கு 15 மெட்ரிக் டன்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த நான்கு நாட்களாக விநியோகம் எதுவும் செய்யப்படவில்லை. தேவையோ தினசரி ஒரு மெட்ரிக் டன்னாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆக்சிஜன் தேவையின் அளவு தினசரி கூடிக்கொண்டிருக்கிறது, பற்றாக்குறையின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. அரசிடம் இப்பொழுது எதிர்பார்ப்பது கூடுதல் திட்டமிடலும், விரைவான செயல்பாடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details