சென்னை:தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக காலையிலும், மாலையிலும் குழந்தைகளை அழைத்து வர வைத்துள்ள வாகனங்களில் பள்ளியின் பெயரை முழுவதும் மறைத்து, மூன்று பக்கமும் பள்ளி நிர்வாகிகள் சொந்த செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நமது சென்னை, நமது செஸ் என பெரிய ஸ்டிக்கர் ஒட்டச்சொல்லி ஆர்டிஓக்கள் வற்புறுத்துகின்றனர்.
பள்ளி வாகனங்கள் எல்லாம் மஞ்சள் கலரில் உள்ளதால் எந்தப் பள்ளி வாகனம் என்பது தெரியாமல் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே அதனை உடனே தடுத்து நிறுத்திட வேண்டும். அரசு பஸ்களில் விளம்பரம் செய்தால் சரியாக இருக்கும்.