தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை திருவேற்காடு பகுதியில் காய்ச்சல் உள்ளவர்கள் பரிசோதனை செய்வதற்காக நடமாடும் பரிசோதனை வாகனம் தொடங்கப்பட்டது. அதை தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் சமூக பரவல் இல்லை பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " கரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்கிறது. தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பில் ஐந்து விழுக்காடு பாதிப்புதான் கிராமப்புறங்களில் உள்ளது. கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவுவதாக தேவையற்ற பீதியை யாரும் நம்ப வேண்டாம். சமூக பரவல் என்பது தமிழ்நாட்டில் இல்லை. மத்திய அமைச்சரும் இதனை உறுதி செய்துள்ளார். சமூக பரவல் என கூறும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் , மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிக்கையை பார்க்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: முதியோர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து - முதலமைச்சர் அனுமதி