தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீ விபத்தில் சிக்கிய பைக் மெக்கானிக்..! - Chennai Bike Mechanic Fire Accident

சென்னை: திருவேற்காட்டில் இருசக்கர வாகனம் பழுது பார்த்து கொண்டிருந்தபோது பைக் மெக்கானிக் மீது திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்து நடந்த கடை
தீ விபத்து நடந்த கடை

By

Published : Jan 11, 2020, 11:56 AM IST

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் வேலப்பன் சாவடி- திருவேற்காடு சாலையில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்திவருகிறார். கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு அவரது கடைக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபுலான(ஹோண்டா யூனிகார்ன்) இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. அதனை சரி செய்வதற்காக குமார் வண்டியின் ப்ளக்கை கழற்றி சோதனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, பெட்ரோல் ஓவர் புல்லானதாக கூறப்படுகிறது. இதனால் செல்ஃப் ஸ்டார்ட் செய்தபோது பெட்ரோல் திடீரென வெளியேறி தீப்பற்றியது. இதில் குமாரின் முகம் முழுவதுமாக தீ பற்றியதால் அவர் பலத்த காயமடைந்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அதையடுத்து, சாலையில் தேங்கி நின்ற மழை நீரை எடுத்து அவர் முகத்தில் தெளித்தனர்.

தீ விபத்து ஏற்படும் சிசிடிவி காட்சி

அதன்பின், சக ஊழியர்கள் வாளியில் தண்ணீரை கொண்டு வந்து குமார் மீதும், இருசக்கர வாகனத்தின் மீதும் ஊற்றி தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து, குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையைக் கொன்ற மகன்

ABOUT THE AUTHOR

...view details