தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹரியானாவில் கைதான தி.மலை ஏடிஎம் கொள்ளையர்கள் சென்னை வருகை! - chennai news

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பலின் தலைவன் உட்பட இருவரை ஹரியானாவில் கைது செய்த தமிழ்நாடு காவல் துறையினர், அவர்களை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: ஹரியானாவில் கைதானவர்கள் சென்னை வருகை!திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: ஹரியானாவில் கைதானவர்கள் சென்னை வருகை!
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: ஹரியானாவில் கைதானவர்கள் சென்னை வருகை!

By

Published : Feb 18, 2023, 7:02 AM IST

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: ஹரியானாவில் கைதானவர்கள் சென்னை வருகை!

சென்னை: பிப்ரவரி 12ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 எஸ்பிஐ மற்றும் 1 இந்தியா ஒன் ஏடிஎம் மையத்திலிருந்து கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் மொத்தமாக 72 லட்சத்து 78,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் வாகன சோதனை, சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் சோதனை எனக் காவல் துறையினர் அடுத்தடுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொள்ளையடிப்பதற்கு உதவிய ஒரு நபரை முதலில் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து கர்நாடகா, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தனிப்படை காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல் துறையினர் ஹரியானாவில் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் தமிழ்நாடு தனிப்படை காவல் துறையினர், ஹரியானா மாநிலத்திலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதனையடுத்து இவர்கள் இருவரையும் காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து, மேலும் ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். தற்போது சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்ட இந்த ஏடிஎம் கொள்ளையர்கள், அங்கு இருந்து சாலை மார்க்கமாகத் திருவண்ணாமலை மாவட்டத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு எவ்வாறு திட்டங்கள் தீட்டப்பட்டது, கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் வேறு நபர்கள் இருக்கின்றார்களா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:CCTV: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரம் - 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது!

ABOUT THE AUTHOR

...view details