தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு கறுப்பு மை பூசியும் சாணத்தை வீசியும் சென்றுள்ளனர் சமூகவிரோத கும்பல். இத்தனை நாள்களாக அரசியல் தலைவர்களின் சிலைக்கு ஏற்பட்டுவந்த அவமரியாதை, இன்று திருவள்ளுவருக்கு ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை: தலைவர்கள் கண்டனம்! - BJP should stop
சென்னை: திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
Thiruvalluvar-statue-contempt-Leaders-condemned
இந்நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு செய்யப்பட்ட அவமரியாதை சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
- இதுகுறித்து வைகோ வெளியிட்ட கண்டனப் பதிவில், திருக்குறள் நெறியை இந்துத்துவ சிமிழுக்குள் அடக்க நினைக்கும் மதவாத சனாதன சக்திகளின் இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை பாஜக நிறுத்தாவிடில், தமிழ்நாடு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசிய பாஜகவினர் என விமர்சித்துள்ளார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறியுள்ளார்.
- "கிராமம் என்பதால் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்படக் காரணமான விஷமிகளை உடனே கண்டறியலாம். திருவள்ளுவர் சிலையை அவமதித்த விஷமிகளை உடனே கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறினார்.
- டிடிவி தினகரன் கூறுகையில், தமிழ், தமிழினம் எல்லைகளைக் கடந்து போற்றப்படுபவர் திருவள்ளுவர். வள்ளுவரின் சொந்த மண்ணிலேயே அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும் இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்ற, தவிர்க்கப்பட வேண்டியவை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆழ்துளைக் கிணறு விபத்துகள் என்று தணியுமோ! - ஹரியானாவில் சிறுமி மரணம்