தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவரிடம் 18 மணி நேரம் விசாரணை...

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த நபரிடம் சென்னை குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு போலீசார், என்ஐஏ அதிகாரிகள் சுமார் 18 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபரிடம் திருவள்ளூர் நபர் பேச்சுவார்த்தை.. 18 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார்
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபரிடம் திருவள்ளூர் நபர் பேச்சுவார்த்தை.. 18 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார்

By

Published : Aug 26, 2022, 11:57 AM IST

சென்னைஆர்.கே.நகரைச் சேர்ந்தவர் ராஜா முகம்மது. இவர் கடந்த ஒரு வருடமாக திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட காக்களூர் சாலையில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி, காக்களூர் பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ராஜா முகம்மது சவூதியில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவருடன் ‘சிக்னல்’ என்ற செயலியில் பேசியதாக குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், ராஜா முகம்மதுவை சென்னை குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் இவரிடம் என்ஐஏ, ஐபி மற்றும் ரா உளவுத்துறையினர் ஆகியோர் மணவாளநகர் காவல் நிலையத்தில் வைத்து சுமார் 18 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சட்ட விரோதமாக செயல்படும் ‘சிக்னல்’ என்ற சமூக வலைதளத்தில் தேச விரோதிகளுடன் பேசியதாகவும், அதில் பேசிய நபர் தன்னை சவூதிக்கு வருவதற்கான பாஸ்போர்ட் ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், இஸ்லாமிய இனத்தை மேம்படுத்த நீ வர வேண்டும் எனவும் கூறியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ராஜா முகம்மது, அவரது முகநூல் பக்கத்தில் இஸ்லாமிய மதத்தை முன்னிறுத்தி பேசுவதாகவும் மற்ற மதத்தினரை தாழ்த்தி பேசும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக, பல்வேறு வழக்குகள் ராஜா முகம்மது மீது பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து குற்றவியல் நடுவர் நீதிபதி மூகாம்பிகை முன்னிலையில் ராஜா முகம்மது ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை சிறையில் அடைத்தனர். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவரிடம், திருவள்ளுரைச் சேர்ந்த நபர் தொடர்பில் இருந்த செய்தி திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பை உருவாக்க திட்டம்? - என்ஐஏ விசாரணை

ABOUT THE AUTHOR

...view details