தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருக்குறள் படித்தால் சாதிவெறி இல்லாமல் போகும்' - minister jeyakumar

சென்னை: திருக்குறளைப் படித்தால் சாதிவெறி பிடித்தவர்களுக்கும் சாதி வெறி இல்லாமல் போய்விடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினம்  அமைச்சர் ஜெயக்குமார்  மாபா பாண்டியராஜன்  thiruvallur birthday celebration in chennai  minister jeyakumar  minister pandiyarajan
திருவள்ளுவர் தினம்

By

Published : Jan 16, 2020, 2:57 PM IST

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின், முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன், விஜிபி சந்தோஷம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், "திருக்குறளைப் படித்தால் சாதி வெறி பிடித்தவர்களுக்கும் சாதி வெறி இல்லாமல் போய்விடும். வள்ளுவன் வழியில் அனைவரும் செல்ல வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்

அதனைத்தொடர்ந்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 72 விருதுகள் தரப்படுகிறது என்றார். அதில் திமுக காலத்தில் அமைத்தது நான்கு விருதுகள்தான் எனச்சுட்டிக்காட்டிய அவர், மீதமுள்ள 68 விருதுகள் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், வருகின்ற 35ஆம் தேதி இரண்டு நபர்களுக்குப் பெரியார், அம்பேத்கர் விருதுகளை முதலமைச்சர் வழங்குவார் என்றும் பாண்டியராஜன் கூறினார்.

அமைச்சர் பாண்டியராஜன்

தொடர்ந்து பேசிய அவர், "திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து இந்து மதத்தவர் என்று கூறினாலும், ஜெயினவர் என்று கூறினாலும் அரசு எந்த அரசாணையைும் அவ்வாறு வெளியிடவில்லை. குடியரசு துணைத் தலைவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படம் அவரின் தனிப்பட்ட விருப்பம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'அதிமுக ஆட்சி நூற்றாண்டு நீடிக்கும்' - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details