தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீத்தேன் திட்டத்திற்கு அவசரமாக அனுமதி கொடுத்தது ஏன்..? - திருநாவுக்கரசர் கேள்வி - chennai

சென்னை: "தேர்தல் முடிந்ததும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு, அவசரம் அவசரமாக அனுமதி வழங்கியது கண்டிக்கத்தக்கது" என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

thirunavukkar

By

Published : May 22, 2019, 7:04 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அது நாளை வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலேயே தெரிந்துவிடும். தேர்தல் முடிந்ததும் மத்திய அரசு, மத்திய சுற்றுச்சூழல் துறை ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு அவசரம் அவசரமாக அனுமதி வழங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது.

மக்கள் விரும்பாத, விவசாயிகள் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தி மத்திய மாநில அரசு திணிக்கக்கூடாது. இந்த திட்டங்களை நிறுத்த வேண்டும்.

திருநாவுக்கரசர்

தூத்துக்குடியில் மக்கள் உயிரை தியாகம் செய்ததை கொச்சைப்படுத்தும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் கொண்டு வரக்கூடாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details