இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பட்டியலின மக்களுடைய நலனுக்காக துணை பட்ஜெட் உள்ளது. இந்த பட்ஜெட் ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் உள்ளது. ஆனால் பெரியார் மண்ணிலேயே பட்டியலின மக்களின் பழங்குடியினருக்கான தனி பட்ஜெட்டை இதுவரை ஏற்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அது சட்டமாக்கப்பட வேண்டும்.
பட்டியலின மக்களுக்கான பட்ஜெட்டை ஏற்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்துகிறது: திருமுருகன் காந்தி - Interview
சென்னை: பெரியார் மண்ணில் பட்டியலின மக்களுக்கான தனி பட்ஜெட்டை ஏற்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை
சிறுபான்மையினர் மக்கள் மீதும், இஸ்லாமிய மக்கள் மீதும் மத்திய அரசு தொடர்ச்சியாக அடக்குமுறையில் ஈடுபட்டுவருகிறது. தற்போது என்ஐஏ மசோதாவானது இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின மக்களை விசாரணை என்ற பெயரில் அதனை பயன்படுத்தி ஒடுக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது.
என்ஐஏ மசோதாவை குறித்து கருத்தளவில் அதிமுக எம்பிக்கள் எதிர்த்து இருந்தாலே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றார்.