சென்னை:மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முள்ளிவாய்க்காலில் நடத்த அநீதியை நினைவு கூறும்விதமாக மெரினா கடற்கரையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும். நினைவேந்தல் நடத்துவதற்கு முக்கிய காரணம், இனி இது போன்ற ஈழப்படுகொலை நடைபெற கூடாது என்பதற்காகவும், கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காகவும் தான்.
கட்சி, மதம், இனம், ஜாதிக்கு அப்பாற்பட்டு தமிழ்நாடு அரசே இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை எடுத்து நடத்த வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை அரசு செய்துதர வேண்டும். தமிழர்களுக்கு நினைவுவேந்தல் கூறுவதற்கு தமிழ்நாட்டில் சாத்தியம் இல்லை என்றால் தமிழ்நாடு அந்த அளவிற்கு அடிமைபட்டு இருக்கிறதா என்ற கவலை உண்டு.