இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு விசிக வாழ்த்து! - ks alagiri
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டட கே. எஸ். அழகிரிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் " என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ப.சிதம்பரம் அவ்ரகளுடைய நெறிப்படுத்தலையும், சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களின் அன்பை பெற்றவர் கே.எஸ்.அழகிரி, கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இப்படி எளிமையும் பழகுவதில் இனிமையும் கொண்ட அவருக்கு இந்தஅங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் கே எஸ் அழகிரிக்கும், செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் எச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.