திமுகவின் முதுபெரும் அரசியல்வாதியும், திமுக பொதுச்செயலாளருமான க. அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை மறைந்தார். அவரின் உடல் சென்னை கீழப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் க. அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான க. அன்பழகனின் மறைவு தமிழ் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.