வ.உ. சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சிலை மற்றும் அவரின் உருவ படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வஉசி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த அரசுக்கு நன்றி - திருமாவளவன் - முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: வஉசி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த அரசுக்கு நன்றி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன் கூறியுள்லார்.
![வஉசி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த அரசுக்கு நன்றி - திருமாவளவன் திருமாவளவன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12974737-406-12974737-1630824046702.jpg)
திருமாவளவன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வஉசியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வஉசி பிறந்த நாள் விழா 1 வார அரசு விழாவாக கொண்டாடப்படும். அவருடைய நினைவு சின்னம் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுப்பிக்கப்படும்.
மனோன்மணி பல்கலைக்கழகத்தில் வஉசிதம்பரனாரின் ஆய்வறிக்கை குறித்து ஆராயப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது போற்றுதலுக்குரியது. இந்நாளில் இதனை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி” என்றார்.