இந்தியாவில் நடக்கும் ஆட்சி குறித்து மும்பையில் உள்ள ஓவியர் அபினவ் கஃபாரே என்பவர் தீட்டிய ஓவியத்தை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “இந்திய தேசியத்தை மதவெறி தேசியமாக மோடி அரசு மாற்றி வருகிறது என்பதை எவ்வளவு நுட்பமாகவும், பக்குவமாகவும், அழகியல் மிளிரும் ஆழ்ந்த அரசியலாகவும், இந்த ஓவியக் கலையினூடாக வெளிப்படுத்தியிருக்கிறார் இதன் படைப்பாளர். அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.