தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை பாயும் - திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

பெரியார் குறித்தும், திமுக குறித்தும் அவதூறாக பேசிவரும் எச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை பாயும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

f
f

By

Published : Oct 16, 2021, 6:58 PM IST

மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து அமைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுவில் தன்னை உறுப்பினராக நியமித்ததற்கு நன்றி தெரிவிக்க சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

விசிக கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில், "மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு நிச்சயம் சிறப்பாக செயல்படும்.

தலித், பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த மாநில அளவில் SC/ST பிரிவினற்கு ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை ஏற்று அரசு நடைமுறைபடுத்தியுள்ளது. தலித் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை இந்த ஆணையம் தடுக்கும் என நம்புகிறோம். இது விசிக கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி.

மதுரை பல்கலைகழகத்தில் தொகுப்பு ஊதிய பணியாளர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்குவதோடு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என இந்த சந்திப்பின்போது முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பின்னடைவை சந்நித்துவரும் அதிமுக

சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் சென்றது அவரின் தனிப்பட்ட விஷயம், அதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் விமர்சனத்திற்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும். அதிமுகவை சசிகலாவால் மீட்டெடுக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

பாஜகவோடு இணக்கமாக செயல்பட்டு பின்னடைவை சந்நித்துவரும் அதிமுக தலைமையை சசிகலா கைபற்றுவார என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனாலும் இது காலம் தாழ்ந்த முடிவு.

எச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை பாயும்

எச்.ராஜா-வின் பேச்சுக்களை தமிழக அரசு கவனித்து வருகிறது. பெரியார் குறித்தும் திமுக குறித்தும் அவதூறாக பேசிவரும் எச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை பாயும். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என நம்பிக்கை உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தும்" என்றார்.

இதையும் படிங்க: வைகோ, திருமா மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து

ABOUT THE AUTHOR

...view details