தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீரில் மலம் கலந்தது; 21ம் நூற்றாண்டில் அநாகரிகத்தின் உச்சம் - திருமாவளவன் - Thirumavalavan comments on pudukottai issues

குடிநீரில் மனிதக் கழிவை (Issue of faeces in drinking water tank) கலப்பது 21ஆம் நூற்றாண்டின் அநாகரீகத்தின் உச்சம் என்றும் இந்த விவகாரத்தில் தேசிய மற்றும் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளாதது ஏன்? என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 19, 2023, 4:19 PM IST

சென்னை:குடிநீரில் மனிதக் கழிவை கலப்பது 21ஆம் நூற்றாண்டின் அநாகரிகத்தின் உச்சம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத் தொட்டியிலுள்ள குடிநீரில் மனித மலம் (Issue of faeces in drinking water tank) கலந்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஜன.19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரில் ஒரே குடிநீர் தொட்டியே இருக்கவேண்டும்: ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "புதுக்கோட்டை வேங்கைவயலில் நடைபெற்ற சம்பவம் தேசத்திற்கே அவமானமான செயல். சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு பதிலாக இந்த வழக்கை சிபிசிஐடிக்கு(CBCID) மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுவதை வரவேற்கிறோம். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. கழிவு கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க வேண்டும். அந்த மக்களுக்கு என தனி குடிநீர் தொட்டி அமைக்கக்கூடாது.

இரட்டைக் குடிநீர் தொட்டியே ஒரு தீண்டாமை தான்:இரட்டைக் குவளை போல், இரட்டை தண்ணீர் தொட்டி, இரட்டை சுடுகாடு போன்றவை கூடாது. இரட்டைக் குவளை முறை தமிழ்நாடு முழுவதிலும் உள்ளது. இந்திய அளவில் சாதி தீண்டாமை உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் 10 இடங்களில் 4ஆம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இரட்டைக் குவளை முறையினை ஒழிக்க வேண்டும். வேங்கைவயல் மேல்நிலைத் தொட்டி குடிநீரில் மனித மலம் கலந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குடிநீரில் மலம் கலந்தது; 21ம் நூற்றாண்டில் அநாகரிகத்தின் உச்சம் - திருமாவளவன்

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் என்ன செய்கிறது?: எஸ்.சி ஆணையம் தனித்து இயங்கக்கூடிய ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு. தேசிய மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையமும், மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் வேங்கைவயலுக்கு செல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். குடிநீரில் மனிதக் கழிவை கலப்பது 21ஆம் நூற்றாண்டின் அநாகரிகத்தின் உச்சம். இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது ஏமாற்றம் தருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தில் வேங்கைவயல் விவகாரம் குறித்து விசிக சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, வேங்கைவயல் போன்ற சாதிய வன்கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திகிறேன்" என கூறினார்.

இதையும் படிங்க: தீண்டாமை விவகாரம்: கோயிலில் ஒன்றாக வழிபாடு நடத்த தயாராகும் மூன்று சமூக மக்கள்

ABOUT THE AUTHOR

...view details