தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் தொகுதியில் 4ஆவது முறையாக திருமாவளவன் போட்டி

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் 4ஆவது முறையாக போட்டியிட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் தொகுதியில் போட்டி

By

Published : Mar 17, 2019, 11:45 AM IST

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிதம்பரம் தொகுதியில் நான்காவது முறையாக தான் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். சிதம்பரம் தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிட உள்ளதாகவும், ஆனால் இங்கு விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடாது எனவும் கூறியுள்ளார். ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விழுப்புரம் தொகுதியில் பாமக கட்சி போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 7 தொகுதிகளில் இதுவும் ஒன்று. இதனால் விழுப்புரத்தில் கடுமையான போட்டி நிலவ உள்ளது.

மேலும், பாமக கட்சி திமுகவுடன் ஆறு தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது.

ABOUT THE AUTHOR

...view details