தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' - பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் - thirukural should be declared national book

சென்னை: உலக பொது மறையான திருக்குறளை நாட்டின் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்
பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்

By

Published : Aug 5, 2020, 4:51 PM IST

உலக மக்களுக்கு பொதுமறையான திருக்குறள் பல மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. உலகில் உள்ள தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்த்து வரும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிற பரப்புரையை முதன் முதலில் ஈடிவி பாரத் ஊடகம் மூலம் பேராசிரியர் ஞானசம்மந்தன் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 5) பேராசிரியர் ஞானசம்மந்தனால் நடத்தப்படும் யூடியூப் சேனலில் மீண்டும் திறக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் எனவும் ஞானசம்மந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக அவர், ஈடிவி பாரத் ஊடகத்தின் மூலம் முதன் முதலில் தாம் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் கூறியதாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' - பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்

ABOUT THE AUTHOR

...view details