தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம்!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் ஐந்து பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.

என்ஐஏ அறிவிப்பு
என்ஐஏ அறிவிப்பு

By

Published : Nov 16, 2021, 7:59 PM IST

சென்னை:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாத்திரக்கடை நடத்தி வந்த இவர் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். குறிப்பாக மதமாற்றத்தை தட்டிக்கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு பின்னர் என்ஐஏவுக்கு (NIA - National Investigation Agency) மாற்றம் செய்யப்பட்டது.

என்ஐஏ வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், சாகுல் ஹமீது, நஃபீல் ஹாசன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றவாளிகள் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை.

என்ஐஏ அறிவிப்பு

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டால் 5 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.

தகவல் கொடுக்க வேண்டிய முகவரி

தேசிய புலனாய்வு முகமை எண். 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை - 600 010. கைபேசி எண். : +91 9962361122. தொலைபேசி எண். 044 - 26615100.

Mail ID : info-che.nia@gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.11.14 கோடி மதிப்பில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details